3 நாட்களுக்கு காய்ச்சல் தொடர்ந்து நீடிக்குமானால் சிகிச்சைபெற்றுக்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (30-10-2022) டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது பெரியகல்லாறு கரையோரப்பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருகும் வகையிலிருந்த இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டதோடு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து கரையோரப்பகுதிகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டன.