நாட்டில் 4 கட்டங்களாக வருகின்ற 29ஆம் திகதிமுதல் பாடசாலைகள் திறக்கப்படப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா அந்தத் தகவல்களை நிராகரித்துள்ளார். அத்துடன் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது பற்றிய திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் 7ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படப் போவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவர முன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.