இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டு பலாத்காரத்திற்கு இலக்கான பெண் தொடர்பில் தற்போது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் உத்தம்பூர் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்பட்ட போது 12 வயது சிறுமியாக இருந்துள்ளார்.குமார் மற்றும் அவரது சகோதரர் குட்டு என்பவர்களே பலமுறை மிரட்டி சீரழித்துள்ளனர்.இந்த நிலையில் குறித்த சிறுமி கர்ப்பமாக, தமது 13ம் வயதில் 1994ம் ஆண்டு அவர் ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்துள்ளார்.
தொடர்ந்து, குழந்தையை தம்மால் காப்பாற்ற முடியாது என்பதால் உத்தம்பூர் கிராமத்தை சேர்ந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார்.மட்டுமின்றி, அவர் ராம்பூர் பகுதிக்கு குடிபெயர்ந்தும் உள்ளார். இதனிடையே காசிப்பூர் பகுதியை சேர்ந்த நபருடன் அவருக்கு திருமணமும் ஆகியுள்ளது.ஆனால் திருமணம் முடித்து 10 ஆண்டுகளுக்கு பின்னர், தமது மனைவி பலாத்காரத்திற்கு இலக்கானவர் என்பது தெரியவர, அந்த நபர் விவாகரத்து செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் தமது சொந்த கிராமமான உத்தம்பூருக்கே திரும்பியுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் மகன் வளர்ந்து அவரது உண்மையான பெற்றோர் யார் என அறிய முயன்ற போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.தொடர்ந்து தமது உண்மையான தாயாரை சந்தித்துள்ள அந்த இளைஞர், இந்த விவகாரம் தொடர்பில் தற்போது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதுடன் டி.என்.ஏ பரிசோதனைகளுக்கும் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.