ஜப்பான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்று கடந்த ஜூன் 30 ஆம் திகதி, சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
இதில், விமான பணியாளர்கள் உட்பட 191 பேர் பயணம் செய்தனர்
20 நிமிடங்களில் 3,000 மீட்டருக்கு விமானம் வேகமாக கீழ்நோக்கிச் சென்றதால், ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் தானாக விழுந்தன.
பீதியடைந்த பயணிகள் சிலர் உயில் எழுதத் தொடங்கி, அன்பானவர்களுக்கு கடைசி செய்திகளை அனுப்பியுள்ளனர்.
பலர் இன்சூரன்ஸ் விவரங்களையும் வங்கிப் பின் நம்பர்களையும் கூட எழுதி வைத்துள்ளனர்.
விமானிகள் உடனடியாக அவசரநிலையை அறிவித்து, ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினர்.
விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் பயணிகளுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகளுக்கு, இரவு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து இழப்பீடாக, 15,000 யென் வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.