வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 25 பஸ் சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நவம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை பொலிஸாராலும், சுற்றிவளைப்புப் பிரிவினராலும் மேற்படி பஸ்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரான நிலான் மிராண்டா தெரிவித்தார்.
மேலும் குறித்த பஸ்கள் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப் பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.