21ஆவது திருத்தத்தை ஏற்றால் இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
நாட்டில் அரசியல் நெருக்கடி வலுத்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்து.
இந்த யோசனைக்கு அரசு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், இடைக்கால அரசமைப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கும் அந்தக் கட்சி முடிவெடுத்துள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.