தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜயை பின்பற்றி நடிகர் தனுஷும் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
இந் நிலையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் ‘நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் திமுக, அதிமுக காலியாகும், என கூறியுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
அரசியலில் ரிஸ்க் எடுக்க தனுஷ் தயாராக இருந்தால்…..
தனுஷின் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறது.. உதவி செய்வதற்கு அனுபவமும், அறிவும் தேவையில்லை.. மனம் இருந்தால் போதும்.. அரசியலில் ரிஸ்க் எடுக்க தனுஷ் தயாராக இருந்தால் 2031 ஆம் வருடம் விஜய் vs தனுஷ் என்று அரசியல் களம் மாறும்’ எனவும் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் கூறியுள்ளாராம்.
அதேவேளை சமீபத்தில் தனது பிறந்த நாள் விழாவில் ரசிகர்கள் முன்பு பேசிய தனுஷ் ‘நாம் இதோடு நின்று விடக்கூடாது.. உங்கள் வீட்டு அருகில் வசிக்கும் மக்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் உதவி செய்யுங்கள்.. நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள்.. நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்’ என்று பேசினார்.
தனுசின் இந்த பேச்சை தொடர்ந்தே அவர் அரசயலுக்குள் வரலாம் என்கின்ற ஊகங்கள் எழுந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

