2024ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தத் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தகுதி சுற்றில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியிருந்தது.
இந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் தலைவர் தோனி 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி தற்போது இரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் இது தொடர்பில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர்,
“அடுத்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் தோனி விளையாடுவாரா என்பது தொடர்பில் என்னால் கூற முடியாது.
தோனி எந்தத் தீர்மானத்தை எடுத்தாலும் அதனை சென்னை அணி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் தோனி விளையாட வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சில தினங்களுக்கு முன் எம்.எஸ் தோனி முகநூலில் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியும் உள்ளது.