பிறக்கப்போகும் 2024 ஆம் ஆண்டில் நிழல் கிரகமான ராகு பகவான் ஆண்டு முழுவதும் மீன ராசியில் பயணிக்கவுள்ளார்.
மேலும் ராகுவின் 7-வது அம்சம் கன்னியில் உள்ள கேது மீது விழுகிறது.
அதோடு மீன ராசியில் அதிபதி குரு பகவான்.
இந்த குரு பகவான் 2024 ஆம் ஆண்டின் மே மாதத்தில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார்.
இப்படியான நிலையில் 2024 ஆம் ஆண்டில் ராகு பகவான் சில ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயங்களையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் தரவுள்ளார்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ராகுவின் அருளால் சிறப்பாக இருக்கப் போகிறது.
முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பண ஆதாயம் கிடைக்கும்.
சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
இந்த ஆண்டில் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
இந்த ஆண்டில் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகுவின் அருளால் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும்.
முக்கியமாக தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை இந்த ஆண்டில் கிடைக்கும்.
சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
ராகுவின் அருளால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் ராகுவின் அருளால் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
சிலர் புதிய வணிகத்தைத் தொடங்கலாம். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
இந்த பயணங்கள் நல்ல பண ஆதாயத்தையும் தரம். அதோடு புதிய வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள் மற்றும் பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடிவடையும்.