பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் மாற்றங்களின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.
இதன்படி, ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாக பார்க்கப்படுகின்றது. இந்த ராகு தோஷம் ஜாதகத்தில் இருந்தால் வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
அத்துடன் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலத்த இழப்புகளை சந்திக்க நேரிடும்.
அந்த வகையில், 2024ல் எந்த ராசிக்கு ராகு பிரச்சனைகளை வரவழைக்கப் போகிறார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ராகுவால் 2024-ல் பொருளாதார ரீதியாக தொந்தரவு தருவார். இந்த வருடம் ஆரம்பம் முதல் இறுதி வரை நிதி பிரச்சினைகள் அதிகமாக வரும். சேமிப்பு விடயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உடல் நிலை கோளாறு ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது. புதிதாக தொழில் துவங்குபவர் பணம் விடயத்தில் அலட்சியம் கூடாது.
2. சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு முழுவதும் பணியால் அதிகமான மன அழுத்தம் அடைவார்கள். பணியில் இறுக்கமான ஒரு சூழல் உருவாகும். 2024ல் எவ்வளவு உழைத்தாலும் அதற்கான பலனை பெற முடியாது. அதிர்ஷ்டம் இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகமாக வரவிருக்கின்றது இதனால் நீங்கள் கடன் அதிகம் வாங்கும் நிலைக்கு தள்ளப்படலாம்.
3. கன்னி
ராகு கன்னி ராசிக்காரர்களின் உறவுகளில் எதிர்மறையான விளைவைக் ஏற்படுத்தும். நண்பர்கள், வேலை இப்படி முக்கியமான விடயங்களில் தடங்கல் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ராகுவால் திருமண வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கும். இந்த வருடம் துவக்கத்திலேயே வேலையில் அழுத்தம் அதிகரித்திருக்கும். திருமணமாகாமல் இருப்பவர்கள் காதலில் கூட மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
4. தனுசு
வழமைக்கு மாறாக இந்த ஆண்டில் உங்கள் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நிலை குறைய வாய்ப்புள்ளது. 2024ல், ராகுவின் தோஷத்தால், தவறான தொடர்புகளில் விழலாம். மேலும் மார்பு அல்லது நுரையீரல் தொடர்பான சில நோய்கள் வரலாம். நிறைவேறாத ஆசைகள் அடுக்கிக் கொண்டே போகும்.
5. மகரம்
2024-ல் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகர ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீட்டிலுள்ளவர்களின் ஆதரவு உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும், இதன் மூலம் உங்களுக்கு எந்தவிதமான பலனும் தராது. பொருளாதாரத்தில் அதிகமான இழப்புக்கள் வர நேரிடும். அது மட்டுமன்றி ஆரோக்கியமான வாழ்க்கையை இந்த ஆண்டில் நினைத்து கூட பார்க்காதீர்கள்.
முக்கிய குறிப்பு
இது ஒரு ஜோதிட கணிப்பு மட்டுமே.