2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்றைய தினம் (08-12-2022) கூடவுள்ளது.
இன்று காலை கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து பங்காளி அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இதன்போது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) முன்வைக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.