அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு . 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீள செயற்படுத்துமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாக தெரிவித்தார்.
இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அவர் மேலும் கூறுகையில்,
நாடு இக்கட்டான நிலையில் உள்ளதனால் நெருக்கடி மேலும் உக்கிரமடையும். எனவே, இந்நிலைமையை சமாளிப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என்றார். அதோடு இவ்வாறான நிலைமை ஏற்படும், இவற்றை செய்யுங்கள் என முன்கூட்டியே அரசுக்கு ஆலோசனை வழங்கினோம்.
ஆனால் அரசு எதனையும் செய்யவில்லை. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் என்ற வகையில், அதனை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைக்கின்றேன் என குறிப்பிட்ட ரணில், முடிந்த விரைவில் 20 வது திருத்தச் சட்டத்தை குப்பைக்கு கூடைக்குள் போடுங்கள் என சினத்துடன் கூறினார்.
19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர நாம் நடவடிக்கை எடுப்போம். அதனை செய்ய வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டிய ரணில் , 19வது திருத்தச் சட்டத்தின் கீழேயே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை கிடைத்ததகவும் குறிப்பிட்டார்.
மேலும் 20வது திருத்தச் சட்டத்தின்படி செயற்பட ஜனாதிபதிக்கு மக்கள் ஆணையும்இல்லை உரிமையும் இல்லை எனவும் ரணில் கூறினார்.