ஸ்பெனியில் இருந்து கால்நடைகளுடன் கிளம்பிய கப்பல் ஒன்று 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சொந்த இடத்தை அடைந்துள்ளது.ஸ்பெயினில் உள்ள கார்டகெனாவில் இருந்து 895 கால்நடைகளுடன் கரீம் அல்லாஹ் என்ற கப்பல் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி புறப்பட்டது.
அந்த கப்பலானது துருக்கியை நோக்கி சென்றது.ஆனால் ஸ்பெயினில் கால்நடைகளுக்கு ஏற்படும் போவின் புளூடோங் என்ற தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக அக்கப்பலை தரையிறக்க துருக்கி அரசு தடை விதித்தது.இதனால் கப்பலானது துருக்கிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் கப்பலில் இருந்த கால்நடைகளுக்கு தீவனங்கள் இல்லாத சூழலும் உருவானது.இந்த நிலையில் தீவனமின்று பல வாரங்களாக கடலில் தத்தளித்துவந்த கப்பல் 2 மாதங்களுக்கு பின் ஸ்பெயினுக்கே திரும்பியுள்ளது.இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.