குற்றச்செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடாது எனவும், இது தொடர்பில் ஒரு புதிய சட்ட திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
இந்த புதிய சட்ட திருத்தம் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், குற்றம் செய்யும் போது ஒரு நபர் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அந்த நபருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கவோ அல்லது அமல்படுத்தவோ கூடாது.
அதற்குப் பதிலாக வேறு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று புதிய திருத்தம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்த ஒரு சிறப்பு குழு எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த திருத்தம் முன்வைக்கப்படவுள்ளது எனவும் நீதி அமைச்சகம் கூறுகிறது.