உதவி வழங்கியவர்:திரு திருமதி சிறிதரன் வேணி (உதவும் இதயங்கள் மகளிர் அணியின் செயலாளர் லண்டன்)
உதவி பெற்றவர்கள்:மா.கனகமணி
உதவித் தொகை :50.000 ரூபாய்.
உதவியின் நோக்கம்:கல்வி ஊக்கிவிப்பு
11.02.2022
அன்பான உறவுகளே!
இன்று 18 வது பிறந்த நாள் காணும் செல்வன் பிரதீப்
சிறிதரன் (லண்டன்) அவர்கள் ம னி த நேயத்துடன் ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ என்ற திட்டத்திற்கமைய பெண்தலைமைத்துவம் கொண்ட குடும்பத்தினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளுக்கு 50.000,00 ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டது.இந்த நிதியில் இருந்து கோழி வளர்ப்பினை ஏற்படுத்தி அதில் இருந்து வரும் லாபத்தில் தனது பிள்ளைகளின் கல்விக்கான சிலவினை குறைக்க முடியும் என்று கேட்டதற்கு இணங்க இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று பிறந்த நாள் காணும் செல்வன் பிரதீப் அவர்களுக்கு மனம் நிறைந்த 18 வது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அத்துடன் அவர்கள் குடும்பமும் இறைவன் அருளால் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம்.
நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
18 வது பிறந்த நாள் காணும் செல்வன் பிரதீப்-உதவித் தொகை :50.000 ரூபாய்.Helping Hearts e.V
No Comments1 Min Read
Previous Articleகொழும்பில் கைச்சாத்தான ஒப்பந்தம்-Colombo news
Next Article இன்றைய ராசிபலன் -12.02.2022-Karihaalan news

