எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை எதிர்வரும் 18 ஆம் திகதியே வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
அமைச்சரவையை நியமித்து அரசாங்கம் ஸ்திரத்தன்மையுடன் இருக்கின்றது என்பதை சர்வதேசத்திற்கு காட்டும் நோக்கில் அன்றைய தினம் அமைச்சரவையை நியமதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினமே அனைத்து ராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் ஏற்பட்ட மக்களின் எதிர்ப்புகளை அடுத்து அரசாங்கத்தின் அமைச்சரவையின் அமைச்சர்கள் அனைவரும் அண்மையில் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து ஜனாதிபதி நிதியமைச்சர் உட்பட நான்கு அமைச்சர்களை நியமித்தார்.