நவக்கிரகங்களில் நிழல் கிரகமான கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்.
அதேப் போல் மீண்டும் அதே ராசிக்கு வர சுமார் 18 ஆண்டுகள் ஆகும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோர் 30 ஆம் திகதி கேது துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைந்தார்.
இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். அதே வேளையில் தேவர்களின் குருவான குரு பகவான மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் குரு கேதுவில் இருந்து 8 ஆவது வீட்டிலும், கேது, குருவிடமிருந்து 6 ஆவது வீட்டிலும் உள்ளார்.
இதனால் சடாஷ்டக யோகம் என்ற அசுப யோகம் உருவாகியுள்ளது. இந்த அசுப யோகம் மே 01 ஆம் திகதியுடன் முடிவடைகிறது ஏனெனில் இந்நாளில் குரு ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார்.
மேஷ ராசியில் உருவாகியுள்ள இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சிலர் கவனமாக இருக்க வேண்டும்.
இப்போது சடாஷ்டக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
சடாஷ்டக யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் மே வரை கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பல சவால்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
மேலும் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளால் அதிகம் சிரமப்படுவீர்கள். கடன் இக்காலத்தில் அதிகமாகக்கூடும்.
மேலும் அடிக்கடி நீதிமன்ற வழக்குகளில் சிக்குவீர்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் மற்றும் வாக்குவாதங்கள் அதிகரிக்கும்.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சடாஷ்டக யோகத்தால் மே மாதம் வரை சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் 10 ஆவது வீட்டில் இந்த யோகம் உருவாகியிருப்பதால், கேதுவால் நற்பலனைத் தர முடியாது.
இக்காலத்தில் உடன் பிறந்தவர்களுடனான உறவு மோசமடையும்.
மனம் விட்டு வெளிப்படையாக பேசாமல் இருப்பதால், உங்கள் உறவுகள் மோசமடையக்கூடும்.
குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் வேலையை இழக்க நேரிடும். முக்கியமாக எதிரிகளிடம் மே மாதம் வரை சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சடாஷ்டக யோகமானது பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் தடைகளையும், சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.
இந்த யோக காலத்தில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியாது.
அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், அதில் தடைகளை சந்திக்கக்கூடும்.
வியாபாரிகள் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் நன்கு யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.