நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ ஜகமே தந்திரம் ‘ திரைப்படம் 17 மொழிகளில் , 190 நாடுகளில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் , ஐஸ்வர்யா லட்சுமியுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, லால் ஜோஸ் , கலையரசன் ஆகியோர் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் கேங்க் ஸ்டார் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுருளி எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இத்திரைப்படம் தமிழ் , ஆங்கிலம், இந்தி , பிரெஞ்ச் , ஜெர்மன் உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, 190 நாடுகளில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது.