பிரித்தானியாவை சேர்ந்த பிரபல கோடீஸ்வர பெண் தான் இளம் வயதில் அனுபவித்த பாலியல் தொல்லைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து தைரியமாக மனம் திறந்துள்ளார்.
சிங்கபூரில் பிறந்தவர் ருத் லேங்ஸ்போர்ட். பின்னர் இவர் லண்டன், லிபியாவில் வளர்ந்த நிலையில் பிரித்தானிய குடியுரிமையும் பெற்றார்.
இதன்பிறகு பிரபல தொகுப்பாளினியாக மாறினார். ருத்தின் சொத்து மதிப்பு $5 மில்லியன் ஆகும்.
இந்த நிலையில் பெஸ்ட் மேகசைன் பத்திரிக்கையில் தனது வாழ்க்கை பக்கங்கள் குறித்து ருத் மனம் திறந்து எழுதியுள்ளார்.
அதன்படி, தன்னுடைய 11 – 16 வயது காலகட்டத்தில் சில முறை பாலியல் தாக்குதலுக்கு உள்ளானேன் என கூறியுள்ளார்.
அதன்படி ஒருமுறை கூட்டமான இரயிலில் பயணிக்கும் போது தன் உடையில் கை வைத்து ஒருவன் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தான் என தெரிவித்துள்ளார்.
இதே போல சில முறை மோசமான அனுபவங்கள் தனக்கு நேர்ந்ததாக கூறியுள்ளார்.
மேலும் அந்த சமயத்தில் நான் ஏன் சத்தம் போட்டு கத்தி பொலிசில் புகார் கொடுக்காமல் விட்டேன் என எனக்கே தெரியவில்லை என்கிறார் ருத்.
ஆனால் என்னை போல இல்லாமல் தனக்கு பிரச்சினை நேர்ந்தால் அதை இந்த கால பெண்கள் உடனடியாக வெளியில் கூற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.