தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய நீர் கட்டண நிலுவை 16 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதேசமயம் குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறிய சுமார் 20 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சர்களின் நீர் கட்டணத்தை செலுத்தும் பொறுப்பு அந்தந்த அமைச்சுக்களிடமே உள்ளது.
எனவே, அதற்கான நிலுவைத் தொகையை சம்பந்தப்பட்ட அமைச்சுக்களிடம் இருந்து வசூலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.