தமிழகத்தில் பெற்ற தாயே மகளை பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மணலி பெரிய சேக்காடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு ரேவதி என்ற 35 வயதில் மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதில் மகள் உள்ளார்.ரேவதி, மாதவரம் பால்பண்ணை ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த நிலையில், திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்(38), காசிமேடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் இவருக்கும், பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சதீஷ்குமார் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர், மாதவரம் துணை கமிஷனர் தனிப்படையில் கூடுதலாக பணியாற்றி வந்த போது, ரேவதி பணியாற்றும் ரேஷன் கடை வழியாக பணிக்கு செல்லும்போது, இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களின் இந்த நட்பு நாளடைவில், நெருங்கி பழகும் அளவிற்கு மாறியதால், இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில், சதீஷ்குமார், ரேவதியின் மகளுக்கு அடிக்கடி பரிசுப்பொருட்கள் வாங்கி கொடுத்து, அவரை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதற்கு அந்த சிறுமி மறுத்த போது, கடந்த மாதம் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், பொறுமை இழந்த அந்த சிறுமி வேறு வழியின்றி, மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து நேற்று முன்தினம் கண்கலங்கிய படி புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமிக்கு நடந்தது எல்லாம் உண்மை தான், இதற்கு சிறுமியின் தாய் மற்றும் அவருடைய பெரியம்மா நிலவழகி என்பவரும் உடந்தையாக இருப்பது அம்பலமானது.
இதையடுத்து, சதீஷ்குமாரை கைது செய்த பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தாய் ரேவதி மற்றும் பெரியம்மா நிலவழகியை நேற்று மதியம் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.