முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் வீட்டில் பணி செய்த சிறுமி தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
அந்த சிறுமியின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொரளை பொலிஸார், முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த சிறுமி நீண்ட காலகமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணியாற்றியவர்களிடம் 6 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் ரிஷாத்டின் தாய் மற்றும் தந்தையிடம் நேற்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இன்றைய தினம் அவரின் மனைவியிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ள போதிலும் அவர் திடீர் சுகயீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையினால் வைத்திய ஆலோசனைக்கமைய விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமியின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இந்த சிறுமி தனது 15 வயதில் ரிஷாத்ன் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வருகைத்தந்துள்ளார். இதேவேளை, குறித்த சிறுமி கடந்த 8 மாதங்களாக வீட்டிற்கு செல்லவில்லை என தெரிய வந்துள்ளது. அவருக்கு மாதம் 20ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.