ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் பகவான்.
செவ்வாய் பகவான் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.
இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
இப்படிப்பட்ட செவ்வாயின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இப்படிப்பட்ட செவ்வாய் கும்ப ராசியில் சுமார் 15 மாதங்களுக்கு பின் நுழையவுள்ளார்.
கும்ப ராசியில் நுழையும் செவ்வாயின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சியால் திடீர் பண வரவையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார்.
இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
மேலும் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்பெயர்ச்சிக்கு பின் கைக்கு வந்து சேரும்.
நிதி நிலை வலுவடையும். பணிபுரிபவர்கள் தங்கள் சிறப்பான செயல்திறனால் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார்.
இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
வியாபாரிகள் தங்கள் வேலையில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த பெயர்ச்சிக்கு பின் ஒரு நல்ல வேலை தேடி வரும். இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப பேராசைக்காரர்களாம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.
ஆளுமையில் நல்ல மாற்றம் தெரியும். சிறப்பான நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் இக்காலகட்டத்தில் கிடைக்கும்.