15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொக்குகே, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கும் பதவி வழங்கப்படவுள்ள அதேவேளை இவர்களில் டலஸ் அழகப்பெரும இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மக்களால் வெறுக்கப்படும் அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்தால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் டலஸ் அழகப்பெரும தலைமையில் மேலும் 10 பேர் சுயாதீனமாக செய்யப்படுவார்கள் என்றும் அறியக்கிடைத்துள்ளது.
இதேவேளை நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டுபவர்களுக்கு அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.