டிக்டாக் அடிமைகளாகக் கிடந்த குடும்பப் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்து, 3 வருடங்களாக பணம் பறித்து வந்த கால்டாக்ஸி ரோமியோவை, அவனிடம் சிக்கிய பெண்கள் ஒருவர் மாற்றி ஒருவர் செல்போனில் வறுத்தெடுத்த ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லதா, சுதா, வானி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி, ரோஜா, லைலா, விதிதா, ராதே , அனு, புஷ்பா, கோகிலா இவர்களுடன் ஒரு வட மாநில பெண் என 15 குடும்ப பெண்களின் வாழ்க்கையில் பல்லாங்குழி விளையாடிய குற்றச்சாட்டுக்குள்ளாகி உள்ள களவாணி கார்த்தி, ஊட்டியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுனர்..!
2018 ஆம் ஆண்டு டிக்டாக்கிற்குள் நுழைந்து வீடியோ பதிவிட்டு, தனது வீடியோவிகிற்கு கமெண்டடிக்க வரும் பெண்களை ரிப்ளையில் கண்ணடித்து காதல் படுகுழியில் தள்ளியுள்ளான் கார்த்தி..! அந்தவகையில் திருமணமான பெண்கள், ஐ.டி நிறுவன ஊழியர், அடகுக்கடை அதிபர் மனைவி, என கார்த்தியின் கைவரிசையால் முகவரி இழந்த பெண்கள் பலர் என்று கூறப்படுகின்றது.
டிக்டாக் தடை செய்யப்பட்டதால் இவனது காதல் கணக்குகள் முடித்து வைக்கப்பட்ட நிலையில் டகாடக் என்ற செயலி மூலம் மீண்டும் திருட்டு கடையை திறந்து மீண்டும் தனது காதல் வம்பு கணக்கை தொடங்கி செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவனால் ஏமாற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட பெண்கள் வாட்ஸ் அப் மூலம் ஒன்றிணைந்து களவாணி கார்த்தி எப்படி எல்லாம் பெண்களை காதலித்து ஏமாற்றினான் என்பதை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதோடு, அவன் பெயரிலேயே போலியான 2 கணக்குகளை தொடங்கி அவனை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தி வருகின்றனர்.
போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து காதலித்த பெண்களை வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த கார்த்தி தனது பழைய காதலிகளின் பழிவாங்கும் தாக்குதலுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் பதறித்துடித்து வருகின்றான்
திருமணத்துக்கு ஒரு பொண்ணு கிடைக்காமல், 90 களில் பிறந்த பாவத்துக்காக பலர் பேச்சிலராக சுற்றும் போது, ஒவ்வொரு பொண்ணும் எப்படி சிக்கினார்கள் என்பதை கார்த்தி புது காதலியிடம் விளக்குவதை கேட்டால் தலையே சுற்றிவிடும் போலிருக்கின்றது.
பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமல்ல இவனது லீலைகளை கண்டு கொதித்து போன ஆண்களும் கார்த்திக் மீது கொலை வெறியில் சுற்றுவதாக அவனது காதலியை அழைத்து எச்சரித்துள்ளனர்.
வகை வகையாக பெண்களுடன் சுற்றிவிட்டு, தனது காதலி சனா மீது சந்தேகப்பட்டு சூடு வாங்கிக் கொண்ட ஆடியோவும் வெளியானது
இது வெல்லாம் போதாது என்று தன் பெயரை கெடுக்க சதி நடப்பதாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளான் கார்த்திக்
போதுமான அளவு ஆடியோ வீடியோ ஆதாரங்கள் உள்ள நிலையிலும் டகாடக் சேட்டைக்காரன் கார்த்தி மீது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஒரு பெண் தனது காதலன் கார்த்தியை தேடி ஊர் ஊராகச் சுற்றும் நிலையில் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய புகாருக்குள்ளாகி இருக்கும் காமுகன் கார்த்தி கைது செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!