உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13 கோடியைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
உலகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, உலகின் 221 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கப்பல்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 130,357,248 யாக உள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 2,842,931 போ் பலியாகியுள்ளனா்.
உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும் அந்த நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 31,246,420 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 566,616 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, கொரோனாவால் பிரேஸில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 12,842,717 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 325,559 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
அந்த இரு நாடுகளுக்கும் அடுத்தபடியாக இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் 40 லட்சத்துக்கும் மேலானவா்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் தொடா்ந்து ஐரோப்பிய கண்டம் முதலிடத்தில் உள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அந்தப் பிராந்தியத்தில் 39,973,338 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.