13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹரிஷ் ராணா என்பவர் கடந்த 2013ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, சண்டிகரில் உள்ள தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
அதன்போது , தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்றார்.
இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் அவருக்கு பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் குணமடைய வாய்ப்பு இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையும் உறுதிப்படுத்தி விட்டது.
இதையடுத்து, தனது மகனை மறைமுக கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி ஹரிஷ் ராணாவின் தந்தை அசோக் ராணா சுப்ரீம்கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
கடந்த ஜனவரி மாதம் இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இன்று 11 , 13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர் ஹரிஷ் ராணாவை கருணைக்கொலை செய்ய நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு அனுமதி அளித்துள்ளது.

