உரிய பணம் செலுத்தப்படாத காரணத்தினால் இலங்கைக்கு 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரியை ஏற்றி வந்துள்ள இரண்டு கப்பல்கள் திருப்பி அனுப்பப்படும் நிலையில் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 12 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அந்த கப்பல்களுக்கு சுமார் 34 மில்லியன் டொலர்களைச் செலுத்த வேண்டியுள்ளது.
எனினும் கப்பல்களுக்குரிய டொலர்கள் செலுத்தப்படாத காரணத்தினால் அவை கடந்த ஆறு நாட்களாக இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை சிக்கியுள்ள குறித்த நிலக்கரி இருப்புக்கள்இறக்கப்படாவிட்டால் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுமெனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.