ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன்.
இந்த சூரியன் மாதம் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார்.
இவர் சிம்ம ராசியின் அதிபதி. இந்த சூரியன் தற்போது சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த சூரியன் (14.03.2024) ஆம் திகதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
ஜோதிடத்தின் படி சூரியனும், குரு பகவானும் நண்பர்கள்.
நண்பனின் ராசிக்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள்.
குறிப்பாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும் மற்றும் செல்வத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் ஏற்படும்.
கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். இக்காலத்தில் புதிய உறவுகள் கிடைக்கும். இந்த உறவால் நல்ல பலன் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள்.
புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். சூரியனின் அருளால் மன அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்.
இதனால் இந்த ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சிக்கு பின் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வழிகள் கிடைக்கும்.
மேலும் வேலை தொடர்பான பயணத்தை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி பலன்கள் கிடைக்கும்.
சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக்கூடும்.