பொதுவாகவே வெற்றிலை அனைத்து சுப நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு மங்களகரமான பொருளாக காணப்படுகின்றது. வெற்றிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய வைட்டமின்களும் செறிந்து காணப்படுகின்றது.
இதுமட்டுமன்றி அளப்பரிய மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட வெற்றிலைக்கு ஆன்மீகத்திலும் மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.
ஆனால் வெற்றிலையைக் கொண்டு பாரிகாரம் செய்யலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. நம்முடைய ராசிகளுக்கு ஏற்ப வெற்றிலையை பயன்படுத்தி பரிகாரம் செய்வது சாஸ்திரத்தின் அடிப்படையில் எமது துன்பங்களை நீக்கி மகிழ்ச்சியான வாழ்வை கொடுக்கும் என்பது ஐதீகம்.
அந்தவகையில் எந்ததெந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்திற்கு வெற்றிலை பரிகாரம் செய்வது அதிஷ்டத்தை கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் :வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிப்பட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம் : வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டால் துன்பங்கள் விலகி இன்பம் பயக்கும்.
மிதுனம் : வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் விலகி, மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம் : வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.
சிம்மம் : வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் நீங்கும்.
கன்னி : வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கவலைகள் தீரும்.
துலாம் : வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் தீரும்.
விருச்சிகம் : வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துயரம் தீரும்.
தனுசு : வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கவலை நீங்கும்.
மகரம் : வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் துக்கம் தொலையும்.
கும்பம் : வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலைகள் நீங்கி, நிம்மதி கிடைக்கும்.
மீனம் : வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் நோய்கள் அனைத்தும் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.