வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது சூரியன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இதனால் சூரியன் மற்றும் குரு பகவானின் நிலைகளால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகியுள்ளது.
இப்படிப்பட்ட யோகம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது.
இந்த நவபஞ்சம் யோகமானது மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அற்புதமான பலன்களை வாரி வழங்கும். .
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குருவும், 9 ஆவது வீட்டில் சூரியனும் உள்ளனர்.
இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம் யோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். குடும்பத்தினருடனான உறவு இனிமையாக இருக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதோடு, நல்ல பண வரவும் கிடைக்கும்.
உயர் கல்வி பயில வேண்டுமென்ற மாணவர்களின் கனவு நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு இந்த யோக காலம் சிறப்பாக இருக்கும்.
நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தொழிலதிபர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள்.
வணிகர்களுக்கு நல்ல நிதி நன்மைகளைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம் ராஜயோகமானது பல நன்மைகளை வழங்கும்.
குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
அந்த பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் உதவியால் அலுவலகத்தில் முன்னேற்றத்தைக் காணக்கூடும்.