இலங்கை கடல் எல்லையில் 11 நாட்களாக நாங்கூரமிடப்பட்டிருந்த எரிபொருள் கப்பலுக்கு 42 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டு, எரிபொருளை விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டீசல் மற்றும் விமானங்களுக்கான தலா 20 ஆயிரம் மெற்றி தொன் எரிபொருளை ஏற்றிய இந்த கப்பல் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கு வந்தது.
டொலர் இல்லாத காரணத்தினால், கப்பலில் இருந்த எரிபொருளை விடுவிக்க முடியாமல் போனதுடன் இன்று டொலர்களை செலுத்தி எரிபொருளை விடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
விடுவிக்கப்பட்டுள்ள எரிபொருளை துரிதமாக தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்