காணி உறுதிப்பத்திரமற்ற சகல காணிகளுக்கும் நடமாடும் சேவைகள் ஊடாக ஸ்வர்ணபூமி, ஜயபூமி உள்ளிட்ட காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும்.
இம்முறை 100,000 காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன பாராளுமன்றத்தில் நேற்று (02) தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் 75,000 காணி உறுதிப் பத்திரங்களை வழங்க முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
1972 ஆம் ஆண்டு காணி சீர்திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்தே சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும். கடந்தகாலத்தில் 200 காணி உறுதிப் பத்திரங்கள் காணாமல் போயுள்ளன ஒரு ஏக்கர் காணி ரூபா. 500 வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.