எடிம் இல் பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தவரை கத்தியால் குத்திய சம்பம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று (29) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இரவு வேளையில் நபர் ஒருவர் வங்கி ஒன்றின் எடிம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்து வெளியில் வந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் ஒருவர் குறித்த நபரை பின்தொடர்ந்து 1000 தருமாறு மிரட்டியுள்ளார்.
பணம் தர மறுத்த நபரை சந்தேக நபர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்தில உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்வு வருவதாக தெரிவித்துள்ளனர்.