பயணிகல் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 1,000 அடி பள்ளத்தில் வீழ்ந்து கொண்டிருந்தபோது சாரதியின் சாதுரியத்தால் பாரிய விபத்து சம்பவம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (03) காலை தும்பிலியாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
திடீர் தொழில்நுட்பக் கோளாறு
ஸ்பிரிங்வெலி பகுதியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு இபுல்கொட தும்பிலியாவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 40 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பஸ் சாரதியின் சாதுரியத்தால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்ட அதேவேளை சம்பவத்தில் பல வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.