உடல் எடை மற்றும் தொப்பை குறைக்க பலரும் பல வழிகளை பின்பற்றி வருகின்றோம். அவர்களுக்கு (Detox Water) நச்சு நீக்கும் தண்ணீர் பெரிதும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்
லெமன்
சாத்துக்குடி
வெள்ளரிக்காய்
புதினா
இலவங்கைப்பட்டை
செய்முறை
இலவங்கப்பட்டை, எலுமிச்சை, சாத்துக்குடி, புதினா மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை வட்ட வடிவில் நறுக்கி ஒரு டம்ளரில் போட வேண்டும்.
பின் அந்த டம்ளரில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி மூடி வைக்க வேண்டும்.குடிக்கும் முறை
இந்த நீரை தினமும் காலையில் தண்ணீர் தாகம் எடுக்கும் போதெல்லாம் குடித்து வர வேண்டும்.
மற்றொரு முறை
பேரீட்சை மற்றும் எலுமிச்சை பழத்தை நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் மிதமான சூடுள்ள நீரை ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
இந்த நீரை மறுநாள் காலையில் தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீருக்கு பதிலாக குடித்து வர வேண்டும்.
உடல் எடை குறைக்க முறையான டயட் இருக்கும் போது வெள்ளரிக்காய் மற்றும் புதினா இலைகளை நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி மூடி வைத்து மறுநாள் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.
பலன்கள்
உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி உடலை சுத்தமாக்குகிறது.
கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கிறது.
வயிற்றுக் கொழுப்புகள் கரைந்து தொப்பை விரைவில் குறையும்.
குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பாலோ பண்ணும் போது தினமும் சிறிது நேர தொப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள் மற்றும் முறையான டயட் உணவுகளை பின்பற்ற வேண்டும்.