1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறும் வகையில் அறிவிப்பு வெளியாக கூடுமென தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்றனர். தேர்வு எழுதாததால் ஏற்படும் குறைபாட்டை ஈடுகட்ட “பிரிட்ஜ் கோர்ஸ்” எனப்படும் சிறப்புக்கல்வித் திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர்.
அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட புத்தகங்களைக் கொண்டு 30 முதல் நாட்கள் வரை சுழற்சி முறையில் பயிற்சியளிக்கப்படுமெனவும் பள்ளிகள் திறக்க தாமதமாகும் நிலையில் அடுத்த கல்வியாண்டின் துவக்கத்தில் பயிற்சியளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.