ஹிமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கின்னாவூர்-ஹிமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)† பாரிய நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
அதேநேரம் படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்ட பொலிஸார் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.