வைத்தியர் அர்ச்சுனாவின் மீதுள்ள வன்மத்தில் பலர் பிரச்சனையின் அடிப்படையை திட்டமிட்டு மறைக்கிறார்கள்….
அர்ச்சுனாவின் முன்னைய நடவடிக்கைகளில் பல விமர்சனம் இருந்தாலும் இன்று, கையில் எடுத்துள்ள விடயத்தை பக்குவமாக கையாண்டுள்ளார்
மூன்றாண்டு காலமாக தொண்டர் சேவையின் அடிப்படையில் 170 க்கு மேற்பட்டோரிடம் சம்பளமின்றியும் ஏனைய ஊழியர்களிடம் அறவிடப்பட்டு வழங்கப்படும் சொற்ப கொடுப்பனவுடன் வேலை வாங்கப்பட்டுள்ளது…
வேலை நிரந்தரமாகும் எனும் நம்பிக்கையில் பணியாற்றிய இவர்களது பணி நிரந்தர கோரிக்கைக்கு வைத்தியசாலை நிர்வாகம் எந்தவித எந்தவித உதவியும் செய்யவில்லை…
வேறு வழியில்லாமல் புதிய அரசிடமாவது நியாயம் கிடைக்கும் என கொழும்பு சென்று சுகாதார துறை அதிகாரிகளை சந்தித்திருக்கிறார்கள்….
இது பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் ஈகோவை பாதித்திருக்கிறது… கொழும்பில் இருந்து வைத்தியசாலை திரும்பிய ஊழியர்களிடம் தாம் தொண்டராக தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக எழுத்துமூல கடிதம் வாங்கியே பணிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது….
இந்த விடயம் தெரிந்தே பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்… அவர் நோயாளர் விடுதிக்கு செல்லவில்லை. நிர்வாக அதிகாரியான பணிப்பாளர் சத்தியமூர்த்தியை அவருடைய அலுவலகத்தில் சந்திப்பது வைத்திய சேவைக்கு இடையூறாக கூறமுடியாது….
பாராளுமன்ற உறுப்பினராக அரச வைத்தியசாலை பணிப்பாளரை சந்திக்க எந்த முன் அனுமதியும் தேவையில்லை….
விடயத்தை எதிர்கொண்ட விதம் பின்னர் காவல்துறைக்கு அளித்த புகார் சத்தியமூர்த்தியின் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது… எனவே சிலர் கண்மூடித்தனமான அர்ச்சுனா எதிர்ப்பை விடுத்து விடயங்களை தீர ஆராய்ந்து நடப்பது நல்லம்…
வடக்கிலே சில அதிகாரிகள் சுகாதாரத்துறையை தமது கைக்குள் வைத்துக்கொண்டு தமது ஊழல்களையும், விரயங்களையும் கவனயீனங்களையும் மூடி மறைப்பது புதிய விடயம் இல்லை….
அர்ச்சுனாவை நோக்கி திரண்ட வாக்குகளின் பின்னால் இந்த பூனைகளுக்கு மணி… அல்லது ஊசியடிப்பதும்… ஓர் நோக்காக இருந்தது என்பதை நாம் மறக்க முடியாது…
யதார்த்தவாதி வெகுஜனவிரோதி
வைத்தியர் அர்ச்சுனாவின் மீதுள்ள வன்மத்தில் பலர் பிரச்சனையின் அடிப்படையை திட்டமிட்டு மறைக்கிறார்கள்.
Previous Article9 நாட்களில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
Next Article தமிழர் பகுதியில் அரச ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு