இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு, சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (07-09-2022) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், சார்க் வெளிவிவகார அமைச்சர்களை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.