“கோட்டா கோ கம” போராட்டத்தில் பங்கேற்ற நடிகை தமிதா அபேரத்னவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (12) உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டமையை எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் ஹிருணிக்கா பிறேமச்சந்திர உள்ளிட்டவர்கள் வன்மையாக கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.