அரசாங்கத்தினால் உள்நாட்டில் பெறப்பட்ட கடன்களை திறைசேரி உண்டியல்கள் மற்றும் இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் என மறுசீரமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில் உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதே இலங்கை அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

