வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய பெண்ணின் நிச்சயிக்கப்பட்ட திருமணம் திடீரென நின்றதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சுஷ்மா (21). இவர் அமெரிக்காவின் டெலாஸில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றி வந்தார்.
அதே ஊரில் பணியாற்றி வந்த பரத் என்பவருக்கும் சுஷ்மாவுக்கும் காதல் ஏற்பட்டது.இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன.
திருமணத்துக்கு ஒருவாரமே இருந்த நிலையில் திடீரென சுஷ்மாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என கூறிய பரத் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.தன்னை பரத் நிராகரித்ததால் மன வேதனையில் இருந்த சுஷ்மா தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக சித்தூரில் உள்ள சுஷ்மா குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்தனர்.இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்ததால் சட்டபூர்வமாக இதை கையாள்வது தொடர்பான வேலையில் பொலிஸ் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.