தாம் வெளிநாடொன்றில் குடியேறப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தென்கொரியா அல்லது வேறும் ஓர் நாட்டில் தாம் குடியேறப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் தென்கொரியாவில் குடியேறப் போவதாக சில ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடகொரியாவிலோ அல்லது வெறும் நாடொன்றிலோ குடியேறுவதற்கு தமக்கு எவ்வித அவசியமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் எதிரிகள் தமக்கு எதிராக இவ்வாறு போலிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் கம்பஹா நகரசபை மைதானத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.