வங்கதேசத்தில் மத அடிப்படைவாதத்திற்கு எதிரான கட்டுரைகளை, வலைதளத்தில் எழுதி வந்த அவிஜித் ராயை படுகொலை செய்த 5 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அவிஜித் ராய் (42), டாக்கா பல்கலைக்கழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார்.
கண்காட்சியைப் பார்த்துவிட்டு, வெளியே வந்த போது, அவரை மத அடிப்படைவாத அமைப்பினா் சரமாரியா வெட்டிக் துடி துடிக்க கொன்றனர்.
இந்தத் தாக்குதலில் அவிஜித்தின் மனைவி ரபிதா அகமதும் காயமடைந்தார். இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணையை, பயங்கரவாதத் தடுப்பு சிறப்புத் தீா்ப்பாயம் நடத்தி வந்தது.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் இறுதியில், முன்னாள் இராணுவ மேஜா் சையது ஜியாவுல் ஹக் உள்ளிட்ட 5 மதவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.