அனைவரது வீடுகளிலும் வெந்தியம் தினமும் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் நம்மில் மிகச் சிலரே வெந்தியத்தின் நன்மைகளைப் பற்றி தெரியாமலே பயன்படுத்தி வருகின்றோம். இந்த வெந்தியத்தில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன.
அவ்வாறான இந்த வெந்தய நீரைக் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன, அதை எப்போது குடிக்க வேண்டும் என்பது பற்றி நாம் இங்கு தெரிந்துக்கொள்வோம்.
வெந்தய நீரை அடிக்கடி குடித்து வர உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். இந்த தண்ணீரைக் குடிப்பதன் மூலம், உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். தினமும் காலையில் வெந்தய நீரைக் குடிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியமாக இருக்கும்
வெந்தய நீர் செரிமான அமைப்பை வலுப்படுத்த ஒரு சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. இது வயிற்றை சுத்தப்படுத்துகிறது. வெந்தய தண்ணீரை குடிப்பது மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எனவே இந்த பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வெந்தய நீரை எடுத்து கொள்ளாலாம்.
வெந்தயம் எடை இழப்பில் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வெந்தயம் மற்றும் பெருஞ்சீரக தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் பருமனை விரைவாகக் குறைக்க முடியும். வெந்தய நீரை மறுநாள் காலையில் குடித்து விட்டு அந்த விதைகளை நன்கு மென்று சாப்பிட்டு வாருங்கள் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, வெந்தய விதை நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது.
வெந்தய நீரை தயாரிக்க, இரவில் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் ஒன்று முதல் ஒன்றரை டீஸ்பூன் வெந்தய விதைகளை ஊறவைக்கவும்.
காலையில் எழுந்தவுடன், இந்த தண்ணீரை நன்றாக வடிகட்டி, பின்னர் வெறும் வயிற்றில் குடிக்கவும். நீங்கள் விரும்பினால், பின்னர் வெந்தய விதைகளையும் சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீரைக் குடிப்பதால் உடல் சூடும் குறையும்