பண்டைய வாஸ்து கொள்கையின் படி, இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சில ஆற்றல் நிலைகளுடன் தொடர்புடையது, அவற்றில் ஒன்று மீன் வளமாகும் நம்மில் பலருக்கு வீட்டில் மீன் வளர்க்கும் பழக்கம் இருக்கும்.
வீட்டில் மீன் வளர்ப்பதால் நல்ல அதிஷ்டங்கள் நம்மை தேடி வரும் மீன் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மை பற்றி நாம் இங்கு பார்போம்.
மனதிற்கு நிம்மதியைத் தரும்
மீனின் அசைவுகள் மனதிற்கு நிம்மதியைத் தரும்.அமைதியை ஏற்படுத்தும். மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். உணவு நிலையம், சூப்பர் மார்கெட், வாடிக்கையாளர்கள் அதிகம் வரும் இடங்கள், துணிக்கடை, ரெடிமேட் கடை போன்றவற்றில் வைக்கலாம்.பழ வகைகள் விற்கும் கடை, காய்கறி விற்கும் இடங்களில் வைப்பதால் வியாபாரம் பெருகும்
தங்க மீன்கள் யோகத்தை தரும்
தங்க மீன்கள் யோகத்தை தரும். வேகமாக இனப்பெருக்கம் செய்யும் மீன்களை வளர்க்கக்கூடாது. ஏஞ்சல் மீனும் கூடாது. தன் இனத்தை சாப்பிடும் மீன்களையும் வளர்க்கக் கூடாது.
கட்டிடத்திலுள்ளவர்கள் வெளியே சென்று இருக்கும் நிலையில் மீன்கள் உள்ளே இருப்பதால் சக்தி உள்ளே இருந்து கொண்டிருக்கும் என்பதாகும். இதனால், இயற்கையின் மாற்றங்களை எளிதில் அறிய முடியும்.
சிவப்பு நிறமீன்கள் வளமையையும், பச்சைநிற மீன்கள் வளர்ச்சியையும், மஞ்சள் நிற மீன்கள் செயல்திறனையும் வளர்க்கும். மீன்களை ஒற்றைப்படையாக வைக்க வேண்டும். 4 ஜோடிகளுடன் ஒருகறுப்பு மீனையும் வளர்த்தால் அதிர்ஷ்டம் எனப்படும்.
மீன்களை வைக்கும் திசை
பொதுவாக மீன் தொட்டிகளை வடக்கு சுவர் அல்லது தென்கிழக்கு சுவரை ஒட்டி வைக்கலாம். தெற்குப் பக்கம் வைப்பது நல்லதல்ல. வாசலுக்கு அருகில் உள்ளே வைப்பது நலம் தரும். படுக்கை அறை, படிக்கும் அறை, சமையல் அறை இவற்றில் வைக்கக் கூடாது.
மீன்கள் கண்களை திறந்த நிலையிலேயே தூங்கும் தன்மை கொண்டது. இதனால் என்றும் விழித்துக் கொண்டிருப்பதால் தீய சக்தியை நுழைய விடாது. தீய சக்தியை உடன் இழுத்து, தீமையை ஏற்றுக் கொண்டு வீட்டில் இருப்பவர்களை காப்பாற்றுகிறது.