அமெரிக்காவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ப்ளோரன்ஸை சேர்ந்த தேஸ்வன் ராபின்ஸ் (28). இவர் கடந்தாண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி அங்குள்ள அடுக்குமாடி வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த பெண்ணை அவர் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்.
பின்னர் அப்பெண் தூங்கி எழுந்த போது தனக்கு நேரும் கொடுமையை கண்டு அதிர்ச்சியடைந்து ராபின்ஸை விலக்கினார்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் ராபின்ஸை கைது செய்தனர்.
விசாரணையில் ராபின்ஸும், அப்பெண்ணும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் என்றும் ஆனால் காதலர்கள் கிடையாது என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் சிறையில் இருந்த ராபின்ஸ் $3,500 ஜாமீனில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மீதான வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என தெரிகிறது