நீர்கொழும்பில் தமிழ் யுவதியொருவர் தற்கொலை செய்த விவகாரத்தில் கைதான ஹொட்டல் உரிமையாளர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.நீர்கொழும்பு, குடாப்பாடு பகுதியிலுள்ள வின்ஸ்டன்ட் சீ புரன்ட் வில்லா என்ற ஹொட்டலின் உரிமையாளரான 50 வயதான சிறிலால் பெர்னாண்டோ என்பவரே கைதாகியுள்ளார்.
24 வயதான யுவதியுடன் சிறுவயதில் உறவு கொள்ளும் அந்தரங்க படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடப் போவதாக அவர் மிரட்டியதால் யுவதி தூக்கிட்டு உயிரை மாய்த்திருந்தார்.உயிரை மாய்ப்பதற்கு முன் எழுதிய கடிதத்தை தனது உள்ளாடைக்குள் அவர் வைத்திருந்தார். பிரேத பரிசோதனையில் கடிதம் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டது.
14 வயதில் அந்த யுவதியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து, அதை காணொளியாக பதிவு செய்து செய்து வைத்துள்ளார். அதன்பின்னர், அந்த யுவதி வளர்ந்த பின்னரும், தன்னுடன் உறவு வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் காணொளியை இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டி தொடர்ந்து, பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.அத்துடன், யுவதியிடமிருந்து பணமும் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொல்லையை தாங்க முடியாமல் யுவதி அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.இதன்படி, விடுதி உரிமையாளர் கடந்த 16ஆம் திகதி கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தற்கொலையாக மூடிமறைக்கப்பட இருந்தபோது இளம் ஊடகவியலாளர் ஒருவரின் துணிச்சலான நடவடிக்கையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.