இந்தியாவில் விவாகரத்துப் பெற்ற மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட எய்ட்ஸ் நோயாளி தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கும் எய்ட்ஸ் உள்ளதா என்று அறிய தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அந்த பெண் தற்போது மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
பெங்களூருவை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கும் வாடகை கார் ஓட்டுநர் ஒருவருக்கும் திருமணம் நடந்து இருந்தது. இந்த நிலையில் அந்த வாடகை கார் ஓட்டுநர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதுகுறித்து அவர் இளம்பெண்ணிடம் கூறவில்லை. ஆனாலும் வாடகை கார் ஓட்டுநருக்கு எய்ட்ஸ் இருப்பதை இளம்பெண் கண்டுபிடித்தார்.
அது குறித்து கணவரிடம் கேட்ட போது தனது முதல் மனைவியிடம் இருந்து தனக்கும் எய்ட்ஸ் வந்ததாக அவர் கூறி இருந்தார். எனினும் குடும்ப சூழ்நிலையால் இளம்பெண், ஓட்டுநருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அந்த ஓட்டுநர் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம் மோசடி செய்தமை இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.
இதனால் அந்த இளம்பெண் தனது கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கே சென்று விட்ட நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் விவாகரத்தும் பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணை சந்தித்து பேசிய ஓட்டுநர், இனி மேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்றும், தன்னுடன் வாழ வரும்படி அழைத்தபோது அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் குளிர்பானத்தில் போதைப்பொருட்களை கலந்து கொடுத்து பெண்ணிடம் ஓட்டுநர் தகாத முறையில் நடந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அறிந்த இளம்பெண் ஓட்டுநர் மீது பனசங்கரி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததுடன், தனக்கும் எய்ட்ஸ் உள்ளதா என்று அறிய இளம்பெண் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ள்ளதாகவும் கூறப்படுகின்றது.

